Tuesday, 20 August 2013

Vitamin - A, E, K, D (வைட்டமின் - ‘ஏ’, ‘டி’, ‘இ’, 'கே')



 உயிர் வாழ்வதற்கு மூலாதாரமாக இருக்கும் வைட்டமின்களும், தாது உப்புகளும் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன. செல்கள் வளர்ச்சியிலும்,  பழுதை சரி செய்வதிலும் வைட்டமின்களுக்கு பங்கு உண்டு 
.

ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இன்றியமையாத வைட்டமின்கள் இருவகைப்படும். அவை:

1. கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்.
 
2. நீரில் கரையும் வைட்டமின்கள்.




 வைட்டமின் - ’, ‘டி’, ‘ மற்றும் வைட்டமின் `கே' ஆகியவை நம் உடலின் ஜீரண சக்திக்கு தேவையான கொழுப்புச் சத்துக்களை கொழுப்பில் கரையும் வைட்டமின்களாக மாற்றுகிறது 
 .

 பி-காம்ப்ளெக்ஸும்,  வைட்டமின் - `சி' யும் நீரில் கரையும் வைட்டமின்களாகும் 
.

 இந்த வைட்டமின்கள் காய்கறி மற்றும் பருப்பு வகைகளில் இருக்கிறது. அதனால், அதிகம் கழுவக்கூடாது.





கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் :


வைட்டமின் – ஏ


 

எதில் இருந்து கிடைகிறது?


 கீரை வகைகள், மாம்பழம், பப்பாளி, கேரட், தக்காளி, பூசணி, முருங்கைக்காய், வெண்ணை, நெய், பால், சீஸ், ஆடு/மாடு ஈரல்.


பயன்கள்.


 தெளிவான கண் பார்வைக்கு, மேனி பாதுகாப்புக்கு, நோய் எதிர்ப்பு சக்திக்கு, நரம்பு மற்றும் எலும்புகளை உறுதியாக்க.


குறைந்தால் ஏற்படும் பாதிப்புகள்.


 கண் தொடர்பான நோய்கள் மற்றும் சருமப் பதிப்பு.



வைட்டமின்- டி




எதில் இருந்து கிடைகிறது?


 சூரிய ஒளி, மீன், மீன் எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, வெண்ணெய், நெய்.


பயன்கள்.


 எலும்பு மற்றும் பற்கள் வளர்ச்சிக்கும், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துகளை கிரகிக்க.


குறைந்தால் ஏற்படும் பாதிப்புகள்.


 குழந்தைகளுக்கு ரிகெட்ஸ் என்ற ஒழுங்கற்ற உடல் அமைப்பு.





வைட்டமின்- ஈ




எதில் இருந்து கிடைகிறது?


 சூரிய காந்தி எண்ணெய், பருத்தி எண்ணெய், சோயா எண்ணெய், ரவை, முட்டை, முளைகட்டிய கோதுமை.


பயன்கள்.


 நீரிழிவு நோயைக் கட்டுபடுத்த, தசைகளை வலுவாக்கி, எதிர்ப்பு சக்தியைக் கூட்ட, இனப்பெருக்கத்திற்கு, இளமையை தக்க வைக்க.


குறைந்தால் ஏற்படும் பாதிப்புகள்.


 உடலின் எதிர்ப்பு சக்திக் குறைவு, சோர்வு, பலவீனம், கவனக்குறைவு, கருத்தரிக்காமை, ஆண்களுக்கு விந்து உற்பத்தி குறைவு.





வைட்டமின் – கே


எதில் இருந்து கிடைகிறது?


  கீரைகள், முட்டைக்கோஸ், பச்சை காய்கறிகள், சோயா எண்ணெய், ஈரல், முட்டை, கடற்பாசி மற்றும் பருப்புகள்.


பயன்கள்.


 தக்க சமயத்தில் ரத்தத்தை உறைய வைக்க.


குறைந்தால் ஏற்படும் பாதிப்புகள்.


 விபத்து மற்றும் பிரசவ நேரத்தில் அதிகப்படியான ரத்தம் வெளியேறக்கூடிய ஆபத்து.

2 comments: