கீரையில் வைட்டமின் ஏ, கே, டி மற்றும் தாது பொருள்கள் உள்ளன. கீரையில் அடங்கியுள்ள கரோட்டின் புரோஸ்டேட் புற்றுநேயை தடுக்க உதவுகிறது. பொதுவாகவே கீரைகளில் அதிக ஃபோலிக் ஆசிட் கிடைக்கிறது. இது இரத்த சோகையைத் தவிர்க்க பெருமளவில் உதவுகிறது.
உணவில் புரதச் சத்தைக் கூட்டி உடல் வளர்ச்சியுறவும் நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் உதவுகின்றன. கண் பார்வை, தோல் பராமரிப்பு போன்ற இன்னும் பல விஷயங்களுக்கு கீரைகளை உண்ணலாம். பொதுவாக இரவு உணவில் கீரைகளைச் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். குடற்புண்ணால் (அல்சர்) அவதிப்படுபவர்கள் கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.